மக்கள் நலனில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை..! விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இந்த விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அத்துடன், அரசாங்கத்துடன், இணைந்துள்ள கட்சிகளும் இந்த விடயம் குறித்து அரசுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments