அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கும் இடையில் அமெரிக்காவில் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமெரிக்கா சென்றுள்ளார்.
இதன்போது கோத்தபாயவுடன் நேற்றிரவு சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுசில் மற்றும் கோத்தபாயவின் சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய தகவல் ஒன்று அடிப்படையாக கொண்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மற்றும் கலப்பு நீதிமன்றில் பலவந்தமான ஏற்றவுள்ளமை தொடர்பில் கோத்தபாய, அமைச்சரிடம் கேட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்கால அரசியல் தொடர்பிலான ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் நீண்ட நேரம் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 9ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.