அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் அண்மையில் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இந்தப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் சங்கத்திற்கு பூரண ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாட்டின் சுகாதாரதுறையில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நெருங்கிச்செயற்பட கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.
தகுதியற்ற மருத்துவர்களை சமூகத்தில் உருவாக்குவது நெருக்கடியான நிலையை தோற்றுவிக்கும்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தனியார் கல்விக்கும் அனுமதியளிக்கப்படக்கூடாது.
இது தேசிய ரீதியில் முக்கியமானது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.