பொது வேட்பாளர் தரப்பிடம் பணத்தை பெற்றுக்கொண்ட ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்
63Shares

மக்கள் விடுதலை முன்னணி கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது வேட்பாளர் தரப்பில் இருந்து பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் நான் நேரடியான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டேன்.

அவர்கள் என்னுடன் மாத்திரம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை. அரசாங்கத்தில் தற்போதுள்ள மோசடியான அமைச்சர்களுடனும் இவர்கள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர்.

டை கோர்ட் அணிந்தவர்கள் பொதுத் தேர்தலில் பணத்தை அனுப்பிய போது நாங்கள் அவற்றை திரும்பி அனுப்பினோம். அவர்களுடனும் இவர்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டது எமக்கும் வெட்கத்தை ஏற்படுத்தியது.

அது மாத்திரமல்ல அவர்களின் பணத்தில்தான் இவர்கள் தற்போதும் இயங்கி வருகின்றனர் என சத்துர சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments