இலங்கை-கனடா உறவுகள் வலுப்பெற்றுள்ளது - அஹ மட் ஜவாட்!

Report Print Ramya in அரசியல்
47Shares

கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 69 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு, கனடாவில் உள்ள இலங்கை தூதர அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் இந்த வருடத்தில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாகவும் கனடாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார்.

Comments