தூக்கத்திலிருந்து எழுந்து பேசுவதல்ல ஆட்சிமாற்றம் : முன்னாள் ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு

Report Print Agilan in அரசியல்
80Shares

எதிர்காலத்தினை நோக்கிய வெற்றி பாதைக்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடித்தளம் மிகவும் பலமாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு கட்சிக்கு வழுசேர்க்கும் வகையில் கட்சியை விட்டு விலகியிருக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் சேர்ந்தே செயற்பட வேண்டும்.

இதேவேளை, இரவில் கண்விழித்து விடிந்து விட்டதாக கதைசொல்வதை போல ஆட்சிமாற்றதை கூற முடியாது. அது போன்ற ஒன்றாகதான் முன்னாள் ஜனாதிபதியின் கருத்துகள் உள்ளன.

அதற்கென நேரம் வரும் போது ஆட்சியை பெற்றுக்கொள்ள முடியும் அது வரையில் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திடீர் என கட்சியை உடைத்துக் கொள்ள வேண்டிய தேவை அவசியமற்றது. மாறாக கட்சிக்கான பலத்தினை பெற உதவ முடியும் என அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மைத்திரி பால சிறிசேன தலைமையிலான ஆட்சியை கட்டாயம் அமைக்கும் அதற்கான முழு வேலைத்திட்டங்களும் பூர்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments