நான் நடிக்கவில்லை உண்மையை வெளியே கொண்டு வருவதற்காக மட்டுமே நான் செயற்பட்டு கொண்டு வருகின்றேன் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அண்மையில் என் மீது பலவகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. நான் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நான் நடிக்க வில்லை முறைகேடான செயலில் ஈடுபட்ட பிரதேச செயலாளரிடம் கொஞ்சிப்பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அதே போன்று நான் மூளை உள்ளவர்களிடம் மட்டுமே விவாதத்திற்குச் செல்வேன். இந்திக அநுருந்த போன்ற ஒன்றும் இல்லாதவர்களை பிரபல்யப்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் எனக்கு இல்லை.
அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக முதலில் செயற்பட்டவனும் நானே. வில்பத்து தொடர்பிலும் கருத்து வெளியிட்டு இருந்தேன் எனவும் ரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.