அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த சில தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அமைச்சரவை மாற்றம் சில மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசேட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய அந்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

Comments