ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு நேர்ந்த நிலை நல்லாட்சிக்கு நேரலாம் - முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்
143Shares

நல்லாட்சி அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நிதி மோசடி உட்பட முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவற்றை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காது போனால், ஊழல், மோசடிகளில் தற்போதைய அரசாங்கமும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நிலைமைக்கு சென்று விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் திருடர்கள், மோசடியாளர் பற்றி தகவல் வெளியிடும் முன்னார் தற்போதைய அரசாங்கத்தின் திருடர்கள் பற்றி பேச நேர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் நடக்கும் மோசடியான கொடுக்கல் வாங்கல்கள், ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது போனால், இந்த அரசாங்கத்தையும் விரைவில் வீட்டுக்கு அனுப்பிட நேரிடும் எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

Comments