நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஜே.வி.பியின் ஆசிர்வாதமும் உள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமரின் கைப்பாவையான நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முழுமையான ஆசிர்வாதம் இருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணக்காய்வு அறிக்கை மூலம் முக்கிய அமைச்சர்களின் கொள்ளையடிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவு உறங்கிக் கொண்டிருக்கின்றது.

அடக்குமுறைக்கு எதிராக சகல மக்களையும் போராட்டத்தில் இணைத்து கூட்டு மக்கள் எதிர்ப்பை கட்டியெழுப்ப போவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Comments