கூடிய விரைவில் கடந்த காலத்தின் பல இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுமா?

Report Print Mawali Analan in அரசியல்
328Shares

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வலம் வந்தவரே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இவர் அரசியல் வாழ்வின் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஒதுக்கப்பட்டவர்.

எனினும் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட கடுமையாக ஆயத்தமாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் அரசியலில் அவர் பிரவேசிக்க முயற்சி செய்வதோடு மற்றொரு வகையில் மகிந்த தரப்பிற்கு எதிராகவும் காய் நகர்த்தத் தொடங்குகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் மகிந்த மற்றும் கோத்தபாயவிற்கு எதிராக அண்மையில் முறைப்பாடுகளையும் பதிவு செய்து உள்ளார். மகிந்த தரப்பிற்கு எதிரியாக இவர் மாறி வருகின்றார் என்பது நேற்று மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது கருத்து தெரிவிக்கையில்,

நான் கூடிய விரையில் அரசியலில் ஈடுபட உள்ளேன் அப்படி வரும் போது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பல இரகசியங்கள் இருக்கின்றேன்.

நான் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தான் ஆனாலும் நான் கட்சியில் இருக்கின்றேனா இல்லையா என்பது தொடர்பில் எனக்கே தெரியாது. ஆனால் மரணிக்கும் வரை அரசியல் வாதியாகவே இருப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் இப்போதைய ஜனாதிபதி மைத்திரியும் என்னுடன் உரையாடி உள்ளார்கள். ஆனால் எந்தப்பக்கம் செல்வது குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

ஆனாலும் அதனை நான் தீர்மானித்து உள்ளேன். நான் செய்த செயல்கள் குறித்து வெட்கப்படவோ வேதனைப்படவோ வேண்டிய அவசியமும் இப்போது எனக்கு ஏற்பட வில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் கடந்த கால ஆட்சியில் மிக முக்கிய புள்ளி அந்த வகையில் இவர் கூறியுள்ள கருத்து படி பார்க்கும் போது ஒரு பக்கம் மகிந்த தரப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே காணப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை இப்போதைய ஜனாதிபதியும் கூட இரகசியங்களை வெளிப்படுத்துவேன் என பகிரங்கமாக கூறியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஏற்கனவே கோத்தபாயவும் மகிந்தவுமே கடந்த காலத்தில் இடம் பெற்ற குற்றச் செயல்களுக்கு காரணம் எனவும் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களிடம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் மீண்டும் என்ன இரகசியங்களை வெளிப்படுத்தப்போகின்றார்? அதன் தாக்கம் யார் மீது குறிவைத்துள்ளது என்பதும் இப்போதைய எதிர்ப்பார்ப்பு.

You may like this video

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்

Comments