விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சிக்கின்றார் சீ.வி.விக்னேஸ்வரன் : மைத்திரி குற்றச்சாட்டு

Report Print Shalini in அரசியல்
277Shares

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தபோது கௌரவமாக இருந்தார். தற்போது முதலமைச்சராகிய பின்னர் விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சித்து வருவதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சீ.வி.விக்னேஸ்வரன் வட மாகாணசபையின் அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நன்மைகளை செய்யவில்லை, மாகாண சபையின் அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் மக்களுக்கு அவரால் நன்மை செய்திருக்க முடியும் என குறிப்பிட்டார்.

இவர் அரசியல் நலன்களை இலக்காக வைத்தே செயற்படுவதாகவும் மைத்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படவுள்ளதால் சமஷ்டி தீர்வு அவசியம் என மக்களுக்கு முதலமைச்சர் தெரிவித்துவருவதாகவும் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

You may like this video

Comments