வடக்கிலுள்ள தொல்பொருள் பெறுமதியான மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பழமைவாய்ந்த இடங்களை பாதுகாப்பதுடன், சுற்றுலா பயணிகள், அந்த இடங்களைப் பார்வையிடுவதற்கு தேவையான வசதிகளை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்பொருள் பெறுமதியான மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளதாக சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.