கடந்த கால ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும், மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையேயும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.
அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை இதனை தெளிவு படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரி அண்மைய சுதந்திரத் தின நிகழ்வில் ஆற்றிய உரையில் கூறியதாவது,
கடந்த 30 வருடத்திற்கும் மேல் தொடர்ந்து வந்த யுத்தம் காரணமாக பலர் அங்கவீனம் அடைந்தார்கள் அப்பாவி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
இராணுவத்தரப்பிலும் பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது. அங்கவீனம் அடைந்தவர்கள் காணப்பட்டார்கள். சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தார்கள்.
என்றாலும் இந்த யுத்தத்தில் இறந்து போனவர்கள் அனைவரும் தோற்றுப்போனவர்கள் அல்ல என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேபோல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் சுதந்திர நிகழ்வின் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
இப்போது நாட்டில் காட்டிக் கொடுப்பே நிகழ்ந்து கொண்டு வருகின்றது.
“அதற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை காட்டிக் கொடுப்பதற்காக வெள்ளைக் கொடி பிடித்து வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தகர்களை சுட்டுக் கொன்று விட்டதை ஒப்புக் கொண்டு கருத்து கூறி உள்ளார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அப்போதைய ஜனாதிபதி சமாதானத்தோடு வந்தவர்களை கொன்றார். ஆனால் இப்போதைய ஜனாதிபதி இறந்தவர்கள் தோற்கவில்லை என கௌரவப்படுத்தியுள்ளார் என விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆட்சிகள் மாற்றம் பெற்று வந்தபோதும் மக்களின் உரிமைகள் பெற்றுக் கொடுக்க வில்லை எனவும் இப்போதைய ஜனாதிபதி கடந்த கால தவறுகளை பூர்த்தி செய்து.
உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசியல் நோக்குனர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.