மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.டி. சித்ரசிறி, பிரசந்த சுஜீவ ஜயவர்தன மற்றும் முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுபிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.