30 வருடத்திற்கு முன்னர் ஜே.ஆர் கூறிய இரகசியத்தை அம்பலப்படுத்திய CIA!

Report Print Vethu Vethu in அரசியல்
1392Shares

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவித்த இரகசியம் தொடர்பில் இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜதந்திர அதிகாரியான பீட்டர் கெல்ரேய்னிடம் கூறிய விடயம் இரகசியமான விடயம் அல்ல என CIA அமைப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் தனக்கு ஒப்பந்தம் செய்துக் கொள்ள நேரிட்டுள்ளதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறியுள்ளார். வெளிநாட்டு நண்பர்கள் ஒருவரும் தனக்கு ஆதரவு வழங்காமையினால் இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட நேரிட்டதாக ஜே.ஆர்.ஜயவதன தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு முறை இராணுவத்தினர் தனது உத்தரவை நிராகரித்ததாக ஜே.ஆர், பீட்டர் கெல்ரேய்னிடம் கூறியுள்ளார். தமிழ் மொழியில் அரசாங்க மொழியாக மாற்றுவதாக தான் உத்தரவிட்டதனாலே இந்திய அமைதி படையின் உதவி கிடைத்ததாகவும் அவர் கூறியதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தன.

அதற்கமையவே 1987ஆம் காந்தி - ஜயவர்தன ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இந்த பிரதான நோக்கத்திற்கமையவே இலங்கைக்கு இந்தியாவின் உதவி கிடைத்துள்ளதாக ஜே.ஆர்.ஜயவர்தன, பீட்டர் கெல்ரேய்னிடம் தெரிவித்துள்ளார்.

Comments