சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்

Report Print Kamel Kamel in அரசியல்
19Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் சந்திக்க உள்ளார்.

சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோரை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளது.

அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து கட்சி மறுசீரமைப்பு பற்றி ஜனாதிபதி தீர்மானிப்பார் என சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைiமை குறித்த அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்து கொள்ள உள்ளார்.

இந்த சந்திப்பிற்கு அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக சாந்த பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Comments