பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டவர்களை விசாரிப்பதில் சிக்கல்

Report Print Agilan in அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கவந்த ஐந்து பேரை சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்வது பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினரை தாக்க வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட ஐவரும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள்.

இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அவர்கள் சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.

குறித்த நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யாமல், சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதனால் விசாரணைகளில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் போனோரை கண்டறிவது தொடர்பான பிரேரணையில் முப்படையினருக்கும் பிரச்சினை வரும் என்று அரசு நன்கு விளங்கிக் கொண்டுள்ளது.

மேலும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலையீடு இதற்கு பிரதானமாக அமைவதோடு இதனூடாக சில சக்திகளையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments