ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் 40 ஏக்கர் நிலம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உள்ளூர் சந்தைகளுக்கு சீமெந்துக்களை விநியோகிப்பதற்காகவே இந்த நிலம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒனிக்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவரான லொக்குவிதான என்ற வர்த்தகரே இந்த நிலத்தை கொள்வனவு செய்யவுள்ளார்.
இந்த திட்டத்திற்காக 15,854 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் மூலம் 500 வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில்,ஹொரணை டயர் உற்பத்திசாலை அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் லொக்குவிதான அடிக்கல் நாட்டி வைத்தார்.
ஆனால்,ஹொரணை டயர் உற்பத்திசாலை அமைக்கும் நடவடிக்கை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹொரனையில் வழங்கப்பட்ட இந்தக் காணி ஒரு ஏக்கர் 100 ரூபா என்ற அடிப்படையில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் வழங்கப்பட்டது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒனிக்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவர் லொக்குவிதான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நெருக்கமானவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.