இலங்கை சர்வதேச கடமைகளை தள்ளிப்போடுகிறது

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது கடமைகளை தள்ளிப்போடுவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

2016-2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச மன்னிப்பு சபையின் 159 நாடுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் நீதிமுறைகள் தாமதமாகிவருகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாமை, சித்திரவதைகள், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வின்மை மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாமை திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் மூதூரில் 17 தன்னார்வு பணியாளர்கள் கொல்லப்பட்டமை, போன்ற சம்பவங்களில் உரிய விசாரணைகள் இல்லாமை போன்ற குற்றச்சாட்டுக்களை மன்னிப்பு சபை அரசாங்கத்தின்மீது சுமத்தியுள்ளது.

Comments