இலங்கைக்கு மூன்று நாட்களை ஒதுக்கிய ஐ.நா! நெருக்கடியை சந்திக்குமா?

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்காக மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது.

மார்ச் மாதம் 2, 15, மற்றும் 22ம் திகதிகளில் இலங்கை குறித்து பேரவையில் பேசப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மார்ச் மாதம் 2ம் திகதி நபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பேசப்படவுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

இந்த குழுவின் விசேட அறிக்கையொன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மார்ச் மாதம் 15ம் திகதி சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக இலங்கை தொடர்பில் பெண்களைகைது செய்து, தடுத்து வைத்துபாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில்ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறுஇராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமைஅமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம்கையளித்திருக்கிறது.

விபரங்களுடன்கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜோன்னஸ்பேர்க்நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மைமற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்திருந்ததுடன்,

இந்த விபரங்களைஇலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும்பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நாகுழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின்பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை குறித்த விவாதத்திற்கு மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளமையானது, இலங்கையின் இன்றைய நிலை குறித்து விரிவாக ஆராயப்படலாம் என்கிறார்கள் அவதானிகள்.

Comments