ஐ.ம.சு.முவின் ஆதரவுடன் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில் வரும்

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இணக்கப்பாட்டுடன் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் கைகோர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இதனூடாக நீண்ட கால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குரிய வரலாற்று சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அரசியல் அமைப்பை உருவாக்குதற்கான வழிநடத்தல் குழு இதுவரை 50 தடவைகள் கூடியுள்ளது.

இந்தக் குழுக் கூட்டத்தின்போதும் அதிகாரப் பகிர்வு குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிக்கின்றனர். எனவே, அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது. அதை மறந்து செயற்படமுடியாது என அமைச்சர் கிரியெல்ல கூறியுள்ளார்.

Comments