பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவு தயாராகிறது!– வெளிவிவகார அமைச்சர்

Report Print Ajith Ajith in அரசியல்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தைஉருவாக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள்தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதேவெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புசட்டம் தொடர்பான சட்டமூல வரைவு நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பணிகள் நிறைவடைந்ததும் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குசமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments