காணிகள் எப்போது விடுவிக்கப்படும்: இராணுவத்திடம் காலக்கெடு கோரியுள்ள அரசாங்கம்

Report Print Ajith Ajith in அரசியல்
81Shares

பாதுகாப்பு படையினர் வசமுள்ள எஞ்சியிருக்கும் தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பாக காலக்கெடுவொன்றை தெரிவிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் இராணுவத்திடம் கேட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனால் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தகல்களின்படி 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து தற்போதுவரை கணிசமானளவு தனியார் காணிகள் விடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்னும் 4 ஆயிரத்து 162 ஏக்கர் காணிகள் விடுக்கவிக்கப்படவுள்ளன.

எனினும், எஞ்சியிருக்கும் தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பான காலக்கெடுவொன்றை கூறுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் தானும் இராணுவத்திடம் கேட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

Comments