கட்சியைப் பதிவு செய்ய பத்திரத்தை நகர்த்திய கருணா

Report Print Reeron Reeron in அரசியல்
128Shares

முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமுத்தி முரளிதரன் தலைமையில் வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கட்சியைப் பதிவு செய்யும் பத்திரங்கள் இன்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கமலதாசினால் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கருணா தெரிவித்தார்.

குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியிருந்தது.

மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இக்கட்சி செயற்படவுள்ளது.

இதேவேளை, வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Comments