மஹிந்த அணி மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்குத் தீர்மானம்!

Report Print Rakesh in அரசியல்

மத்திய அரசைப் போலவே மாகாண சபைகளிலும் நடந்து வரும் முறைகேடுகளால் அதிருப்தியடைந்திருக்கும் மஹிந்த அணியான பொது எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்திருகின்றனர் என மாகாண சபைகளின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென் மற்றும் மேல் மாகாண சபைகளில் இந்த நிலை உக்கிரமடைந்திருப்பதாகவும், தென் மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலில் சுயாதீனமாகப் போவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளது.

மேலும், மேல் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சுமார் 45 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானம் எடுத்திருப்பதாகவும், அதற்கு முன் தங்கள் தீர்மானம் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Comments