மஹிந்தவின் பொறிக்குள் சிக்கிய சம்பந்தன், சந்திரிக்கா..! ஆட்சி கவிழ்ப்பு சாத்தியம்

Report Print Vino in அரசியல்

நாட்டில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு முறையை கோரும் சம்பந்தன், அதன் பின்னர் பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா அல்லது ரணிலா அம­ர­வேண்டும் ­என்பதையும் தீர்­மா­னிக்­க ­வேண்டும் என சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிலைமை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சம்பந்தன் கூறுவது போன்று புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழலாம்.

இந்த மாற்றங்களை சாதகமாகும் பட்சத்தில் மஹிந்­த ராஜபக்ஸவின் 2017 ஆம் ஆண்டு அர­சாங்க கவிழ்ப்பு முயற்­சியும் சாத்­தி­ய­மாகும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு கடந்த கலங்கலாக ஆட்சியை கவிழ்க்கப்போவதாக கோரும் மஹிந்தவின் பொறிக்குள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­மந்தன் மற்றும் மங்­கள சம­ர­வீர , சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே சர்வஜன வாக்கெடுப்பினை இவர்கள் கோருகின்றார்கள். ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் அறிந்திருக்க முடியாது என டிலான் கூறினார்.

மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில், தற்போதைய அரசாங்கத்தில் நிலவும் பலவீனங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி வெகு விரைவில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Comments