இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன..? ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்தப்படுமா..

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்ப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்நிலையில், அமெரிக்க பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே இன்று உரையாற்ற உள்ளார்.

இதன் போது இலங்கை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்படு இன்று வெளிப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக 2015ஆம் ஆண்டு ஒப்டோம்பர் மாதம் இலங்கை தொடர்பில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், இலங்கை்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் இலங்கை தொடர்பில் மௌனம் காத்து வந்தது.

எனினும், புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராந்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று அமெரிக்க பிரதிநிதி எரின் பார்க்லே இன்று உரையாற்ற உள்ளார்.

இதன் போது இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு வெளிப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments