அரசியல் கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் புலிப் போராளிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இந்த கட்சியை ஆரம்பித்துள்ளதாக திருகோணமலை சம்பூரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று தமது கட்சியை பதிவு செய்துக்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய கட்சியின் ஊடாக வடக்கு, கிழக்கு என்ற எல்லையின்றி தமது மக்களுக்காக ஜனநாயகமாக செயற்பட எண்ணியுள்ளதாக புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Comments