ஜெயலலிதா மரணம்! அடுத்தடுத்து அம்பலமாகும் இரகசியங்கள்! விடை தெரியாத கேள்விகள்!

Report Print K.Rangan in அரசியல்
732Shares

ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டிருந்த எக்மோவை ஒருவரது நெருக்கடியால்தான் அப்பல்லோ அகற்றியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது பொருத்தப்பட்டிருந்த எக்மோவை கழற்றி வீசுங்கள் என 'பாஸ்' உத்தரவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ந் தேதி மாலை 4.20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இந்த மாரடைப்புக்கு காரணமே உடன் இருந்த ஒருவர், தம்மை அரசியல் வாரிசாக அறிவிக்க ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுத்தார் என கூறப்பட்டு வருகிறது.

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அப்போது அப்பல்லோ மருத்துவமனைக்குள் 'பாஸ்' நுழைந்திருக்கிறார்.

அங்கிருந்த நிலைமையை பார்த்து விட்டு தமது சீனியரிடம், அதான் முடிஞ்சு போச்சு.. இனி அந்த கருவியெல்லாம்.. தூக்கி வீசிட்டு அறிவிச்சுடுங்க என எகத்தாளமாக கூறினாராம்.

இதை அருகே இருந்த டாக்டர்கள் பலரும் அதிர்ச்சியாகிப் போனார்களாம்.

இருந்த போதும் மருத்துவர்கள் 24 மணிநேரம் பொறுத்தாக வேண்டும். அதன்பின்னர் தான் முடிவெடுக்க வேண்டும் என கறாராக கூறினார்களாம்.

இதனால் 24 மணி நேரம் காத்திருந்திருக்கிறார் பாஸ். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இப்பவாவது எடுக்கலாமா என டாக்டர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.

இதற்கு அடுத்துதான் அப்பல்லோ மருத்துவமனையில் அறிக்கையில் கூறியபடி எக்மோவை எடுக்கலாம் என்ற முடிவை ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் 'முறைப்படி' தெரிவித்திருக்கின்றனர்.

இதனைத்தான் பி.எச். பாண்டியன் போன்றவர்கள் எக்மோவை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு எப்படி அப்பல்லோ நிர்வாகம் தள்ளப்பட்டது என்ற கேள்விக்கு பதில் வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார் என்கின்றன ஓபிஎஸ் வட்டாரங்கள்.

இதேவேளை, செப்டம்பர் 22-ந் தேதி நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணங்களுக்காக மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார் என சொல்லப்பட்டது.

ஆனால் அப்பல்லோ அறிக்கையோ, போயஸ் கார்டனில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்தார். அந்த நிலையில்தான் மருத்துவமனையில் சேர்த்தோம் என உண்மையை போட்டுடைத்தது.

அப்படியானால் ஜெயலலிதா மயக்கமடைந்தது எப்போது? முதல்வர் என்கிற அடிப்படையில் ஜெயலலிதா வீட்டில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் எங்கே? ஏன் அப்பல்லோவுக்கு போனடித்தார்கள்? என விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.

தற்போதைய அப்பல்லோவின் அறிக்கையானது 2011-ல் மோடியின் எச்சரிக்கையையும் ஜெயலலிதாவின் சதி அறிக்கையையும் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது என்பது மறுக்க முடியாது.

Comments