புலனாய்வாளர்கள் கைது செய்யப்படுவதால் புலனாய்வு கட்டமைப்பு சீர்குலையாது! சரத் பொன்சேகா

Report Print Kamel Kamel in அரசியல்

சில புலனாய்வு உத்தியோகத்தர்களை கைது செய்த காரணத்தினால் நாட்டின் முழு புலனாய்வுக் கட்டமைப்பும் சீகுலைந்து விடாது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் சிலரை கைது செய்த மாத்திரத்தில் இராணுவமோ அல்லது புலனாய்வுப் பிரிவோ சீர்குலைந்திடாது.

ஜனாதிபதியும் மற்றும் நாட்டின் அனைத்துப் படையினரும் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்தே செயற்பட வேண்டும்.

இதற்கு புறம்பாக வகையில் செயற்பட அனுமதியளிக்கப்படாது.

நான் இராணுவத் தளபதியாக கடயைமாற்றிய காலத்தில் கோத்தபாய ராஜபக்சவே கொழும்பின் புலனாய்வுப் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Comments