போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஓரிடத்தை பெயரிட வேண்டும்: மஹிந்த அமரவீர

Report Print Kamel Kamel in அரசியல்
25Shares

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒர் இடத்தை பெயரிட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நாள் தோறும் அனைத்து விடயங்களுக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் ஓர் வழமை உருவாகியுள்ளது.

இந்தப் போராட்டங்களின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் நாள் தோறும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் போராட்டங்களை நடாத்த நாட்டில் ஒர் தனியான இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

தேவை ஏற்பட்டால் அந்த இடத்திற்கு ஊடகவியலாளர்களை அனுப்பி வைக்க முடியும்.

இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுவதனை ஊடகங்கள் ஏழு நாட்களுக்கு நிறுத்தினால் போராட்டங்கள் நடைபெறாது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Comments