விமலின் கட்சி சுயாதீனமாக செயற்பட முடியுமா? சபாநாயகரின் தீர்மானம் இன்று

Report Print Ajith Ajith in அரசியல்

விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடியுமா அல்லது இல்லையா என்பது குறித்த சபாநாயகரின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த தீர்மானத்தை இன்று சபைக்கு அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஐந்து பேரும் சுயாதீன அணியாக செயற்பட அனுமதிக்குமாறு தம்மால் விடுகப்பட்ட கோரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென்று விமல் வீரவன்ஸ நேற்று சபாநாயகரிடம் வினவியுள்ளார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து இன்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

Comments