பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியாக இலங்கையுடன் வலுவான உறவை பேண தமது நாடு தயாராகவிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சக்திவள துறைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தாங்கள் இலக்கைக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சந்திப்பின் போது அவுஸ்திரேலியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.