கைது செய்திருக்கலாம், சுட்டுக்கொள்வதென்பது கண்டிக்கத்தக்கது : கூட்டமைப்பு கண்டனம்

Report Print Vino in அரசியல்

இந்திய மீனவர் பிரிட்ஜோ கடற்படையினரால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள்ள சம்­ப­வத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் கடற்படை தொடர்பு படவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், எனினும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இந்­திய மீன­வர்­கள் கடல் எல்லை தாண்­டு­வதை நாம் அனு­ம­திக்­க­வில்லை. அவர்­கள் அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்­தால் கைது செய்து சட்­டத்­தின் பிர­கா­ரம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­லாம்.

அதுவே உகந்த நட­வ­டிக்­கை­யாக அமை­யும் என்றும் சுட்­டுக் கொல்­லப்­ப­டு­வது கண்­டிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மா­கும் என தெரிவித்திருந்தார்.

Comments