பாராளுமன்றத்தில் சபாநாயகர் கூறிய கருத்தானது விமல் வீரவன்ச மற்றும் கூட்டு எதிரணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியானது, தனி கட்சியல்ல என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடியுமா? இல்லையா? என்பது குறித்து சபாநாயகர் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சபாநாயகரின் கருத்தால் இரு தரப்பினர்களுக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு கூச்சல் குழப்பங்களால் சபை நடவடிக்கை பாதிப்புக்குள்ளானது.
இதன் காரணமாக சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து இன்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்.
அதன் படி விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியானது, தனி கட்சியல்ல என்று சற்றுமுன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.