பசில் பிணையில் விடுதலை!

Report Print Ramya in அரசியல்
45Shares

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்திதிட்டத்தின் கித்சிறி ரணவக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, உள்ளூர் அதிகாரிகளுக்கு GI குழாய் வழங்குவதாக36 மில்லியன் அரச நிதிகளை மோசடி செய்தததாக பசில் மற்றும் கித்சிறிக்கு எதிராககுற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே அவர்களை பிணையில்விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

இருவரையும் தலா 2 மில்லியன் ரொக்க பிணையிலும்,தலா 10 மில்லியன் பெறுமதியானமூன்று சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றநீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இருவரையும்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறுநீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments