நாடாளுமன்றில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவை நாடாளுமன்றை விட்டு வெளியே செல்லுமாறு சபாநாயகர்உத்தரவிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் வேண்டுகோளை சபாநாயகர்இன்றைய தினம் நிராகரித்தார்.
இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களால்,நாடாளுமன்றில் பெரும் பரபரப்பு ஏற்பப்ட்டது.
எனவே சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளதுடன்,தினேஸ் குணவர்தனவைநாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.*
நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமலின் கோரிக்கைக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததனை தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றிற்குள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக பரபரப்பு நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரின் இந்த ஒழுக்கமற்ற செயல் காரணமாகவே நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,தேசிய சுதந்திர முன்னணி தனித்து சுயாதீனமாக இயங்குவது தொடர்பில்,விமல் வீரவங்ச அண்மையில் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமலின் கோரிக்கைக்கு மறுப்பு!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் வேண்டுகோளுக்குசபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தனித்து சுயாதீனமாக இயங்குவது தொடர்பில்,விமல்வீரவங்ச அண்மையில் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி சுயதீனமாக இயங்குவதாகவிமல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.