முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியினர் இரண்டாக பிளவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தலைவர் தெரிவின் போது இவ்வாறு பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்த அணியில் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன் போது மஹிந்த அணியினர் இரண்டாக பிளவடைந்து வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like this video