யாழ்ப்பாணத்திலும், வெளிநாடுகளிலும் எனக்கெதிராக தீயசக்திகள்..! கருணா குற்றச்சாட்டு

Report Print Vino in அரசியல்
142Shares

யாழ்ப்பாணத்திலும், வெளிநாடுகளிலும் இருக்கும் சிலர் பணத்தினை வழங்கி இங்கிருக்கும் அப்பாவி இளைஞர்களை தூண்டி விடும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் போராளிகளால் உயிராபத்து தொடர்பில் அவரிடம் வினவிய போதே முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை.

குறிப்பாக முன்னாள் போராளிகளுக்காகவே நான் "தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.

முன்னர் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் அது வெற்றியளிக்கவில்லை. அந்த வகையில் எனது கட்சியூடாக முன்னாள் போராளிகளை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

ஆகவே இவர்களை வைத்து நேர்மையான அரசியல் கட்டமைப்பினை கொண்டு வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளதே அன்றி, முன்னாள் போராளிகள் ஆபத்து இருப்பதாக நான் கூறவில்லை,

குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டில் உள்ள சில தீயசக்திகளே இது தொடர்பில் பொய்யாக கூறி எனக்கெதிராக செயற்படுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Comments