கொல்லப்பட்டார்களா..? அப்படியானால் உத்தரவிட்டது யார்..? பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

Report Print Murali Murali in அரசியல்
2706Shares

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் காணாமல் போனவர்கள் குறித்து பாராளுமன்றில் இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்..?

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இன்று எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர்..? உயிருடன் இருப்பார்களாக இருந்தால் அவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த கருத்தை பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்படி கொலை செய்யப்பட்டிருப்பார்களானால், அதற்கு உத்தரவு கொடுத்தது யார்...? இறுதி யுத்தத்தின் போது முன்னாள் போராளிகளை சரணடையுமாறு படைத்தரபினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..? இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் குறித்து இராணுவத்தினரிடமே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது மட்டுமே காணாமல் போனவர்கள் குறித்த உண்மையினை கண்டறிய முடியும். எனினும், இராணுவத்தினரை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அப்படியாயின் எவ்வாறு உண்மையினை கண்டுப்பிடிக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனவர்கள் குறித்து வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this video

Comments