ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலப்பு நீதிமன்ற பொறிமுறையினை பரிந்துரை செய்து அறிக்கை சமர்பித்துள்ளார்.
எனினும், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையினை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை குறித்து அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் நாளை காலை 11 மணிக்கு (ஜெனிவா நேரம்) இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலில் சர்வதேச சட்டவல்லுனர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.