இந்தோனேசியாவிற்கும் இலங்கைககும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின், மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பை அடுத்தே இந்த இணக்காம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை, இந்தோனேசியா நாட்டு தலைவர்களுக்கிடையில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்து சமுத்திரத்தை சேர்ந்த 21 நாடுகள் பங்கு பற்றிய இயோரா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, 40 வருடங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பினை நினைவுகூரும் வகையில் இன்று முற்பகல் இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான மர்டேகா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்படி ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும், பாரம்பரிய தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
இதில் இலங்கை சார்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆரச்சி அவர்களும் இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் அலுவல்கள் மற்றும் மீன்படி அமைச்சரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்த ஊடக சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ (Joko Widodo) அவர்களால் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கோலாகலமான வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது.