விமலின் பிணை மனு விசாரணை திகதியை அறிவித்த நீதிமன்றம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
55Shares

விமல் வீரவன்சவின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிணை வழங்குமாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்வைத்த மீள் திருத்த பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் மனுக்கொடுத்திருந்தார். இந்நிலையில் அவரின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments