முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தேர்தலில் எதிர் கொண்ட போது, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவருக்காக தேர்தலில் பிரச்சாரங்களைச் செய்தவர்களும் என்னுடைய கணவரின் பிரச்சினையையும் முன்னிலைப்படுத்தி பேசினர்.
ஆனால், தேர்தலின் பின்னர் எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் பெற்றுத் தரவில்லை என ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து வருகிறது.
இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தன்னுடைய சாட்சியங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,