மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்த விடயத்தில் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர்உதயங்க வீரதுங்கவின் தொடர்பு குறித்து விசாரணை செய்யும் நிதி மோசடிகளுக்கு எதிரானபொலிஸ் பிரிவு, உதயங்க தற்போது வசிக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வீட்டில்சோதனை நடத்துவதற்கு சர்வதேச பொலிஸ் உதவியை நாடவுள்ளது.
இதற்கான அனுமதியை நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு நேற்று நீதிமன்றத்திடம்கோரியுள்ளது. எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள உதயங்கவின் சரியான முகவரியை இன்னும்அறிந்து கொள்ள முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ்பிரிவு தெரிவித்தது.
ஏற்கனவே உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்னசர்வதேச பொலிஸ் ஊடாக பிடியாணையை பிறப்பித்துள்ள நிலையிலேயே நேற்றைய கோரிக்கைபொலிஸ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முதல் மைத்துனரான உதயங்க வீரதுங்க,இலங்கையின் விமானப்படைக்காக கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27ரக தாக்குதல்விமானங்கள் விடயத்தில் ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த கொள்வனவின் பெறுமதி 14 மில்லியன் டொலர்களாகும்.
குறித்த ஊழல் விடயம் செய்தியாளர் இக்பால் அத்தாஸின் கட்டுரை ஒன்றில் வெளியானதகவலை அடுத்தே தெரியவந்தது