புது வருடத்தில் மைத்திரி கொழும்பில் - ரணில் ஜப்பானில் - மஹிந்த தங்காலையில்

Report Print Vethu Vethu in அரசியல்
43Shares

தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாட இலங்கை மக்கள் தயாராகி வரும் நிலையில், நாட்டுத் தலைவர்களின் நிலைப்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கள தமிழ் புத்தாண்டின் சம்பிரதாயங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க புது வருடம் உதயமாகும் போது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் செல்கின்றார்.

பிரதமர் தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக எதிர்வரும் திங்கட்கிழமை ஜப்பான் நோக்கி செல்லவுள்ள நிலையில் நான்கு நாள் விஜயத்தின் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வியட்நாம் நோக்கி செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் புத்தாண்டினை தங்காலை கால்டன் இல்லத்தில் கொண்டாடவுள்ளார்.

புது வருட உதயமாகும் போது மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கட்சி நடவடிக்கைக்காக 15ஆம் திகதி இத்தாலி நோக்கி செல்லவுள்ளார் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Comments