பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் நாமல் மீது வழக்கு தாக்கல்

Report Print Vethu Vethu in அரசியல்
87Shares

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஐவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கவரஸ் கோப்ரேட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் 30 மில்லியன் ரூபாய் பணம் தூய்மையாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏனையவர்கள் சுஜானி போகொல்லாகம, நித்யா சேனானி, இரேஷா சில்வா மற்றும் இந்திக கருணாஜீவ ஆகிய நால்வராகும்.

Comments