அன்று அநுர பண்டாரநாயக்கவுக்கு கிடைத்த கௌரவம் இன்று தஹாம் சிறிசேனவுக்கு....!

Report Print Vethu Vethu in அரசியல்
164Shares

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது மகன் அநுர பண்டாரவுக்கு ரஷ்யாவில் விசேட கௌரவம் கிடைத்தது.

இந்நிலையில் 43 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு ரஷ்யாவில் சிறந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய ரஷ்ய விஜயத்தின் போதே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

1974 வருடம் சிறிமாவே பண்டாரநாயக்க அப்போதைய ரஷ்ய தலைவர் லியோனிட் என்பரின் அழைப்பில் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுடிருந்தார்.

அன்று அந்த விஜயதத்தின் போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் அவரது மகன் அநுர பண்டாரநாயக்கவும் இணைந்திருந்தார்.

அன்று அந்த விஜயத்தின் போது அநுர பண்டாரநாயக்க மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு சிறப்பான கௌரவம் மற்றும் வரவேற்பு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகள் ஒரு போது ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவில்லை.

முன்னாள் ஜனாதிபதி தனது பதவி காலங்களில் இரண்டு முறை ரஷ்யாவுக்கு சென்ற போதிலும், அதனை உத்தியோகபூர்வ விஜயமாக கருதவில்லை. அந்த விஜயங்கள் உத்தியோகபூர்வ அழைப்பினால் மேற்கொள்ளப்பட்டதல்ல. இந்த விஜயங்களின் போது ரஷ்யாவின் கீழ்மட்ட அதிகாரிகளை மஹிந்த சந்திருந்தார்.

ரஷ்ய அரசாங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய அங்கு சென்ற அவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு உயர் கௌரவம் மற்றும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

47 மோட்டார் வாகனங்கள் மற்றும் 9 மோட்டார் சைக்கிள் பேரணியுடனான வரவேற்பு மற்றும் இராணுவ அணி வகுப்புடனான வரவேற்பு மைத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படங்களை தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Comments