புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை : சுதந்திரக்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்
44Shares

சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் எவ்வித யோசனைகளோ அல்லது புதிய பந்திகளே புதிதாக வரையப்பட்டு வரும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குள் உள்ளடக்கப்பட கூடாது என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரையும் நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமான முறையில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எனினும் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும், நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சிதைக்கும் எந்த யோசனைகளும் உள்ளக்கப்படக் கூடாது.

இதேவேளை, தேர்தல் முறை கட்டாயம் மாற்றப்பட வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments